மதுரையில் ரூ.37.24 கோடியில் குடியிருப்பு கட்டுமான பணி.

Published Date: August 19, 2023

CATEGORY: CONSTITUENCY

மதுரை மத்திய சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆரப்பாளையம் மஞ்சள் மேடு பகுதியில் குடியிருப்புகள் கட்டப்பட வேண்டும் என அப்பகுதி மக்கள் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இடம் கோரிக்கை விடுத்தனர். இதை அடுத்து தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விடர் மேம்பாட்டு ரூ.37.24 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. மேலும் குடியிருப்புகள் கட்டுமான பணிகளும் துவங்கி நடந்து வருகிறது . மொத்தம் 320 குடியிருப்புகளுடன் நடந்து வரும் கட்டுமான பணிகளை நேற்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது மேயர் இந்திராணி பொன் வசந்த், பகுதி செயலாளர் எஸ்.எஸ். மாறன் மற்றும் அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

Media: Dinakaran